Saturday 12 March 2016

செல்வம் தரும் அவல் நிவேதனம்!

மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று குருவாயூர் கோவிலில் குசேலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட குசேலர் வறுமை யில் வாடினார். அப்போது அவர் மனைவி, "உங்கள் நண்பரைப் பார்த்து நம் நிலையைச் சொல்லுங்கள்' என்று, வீட்டிலிருந்த சிறிதளவு அவலை எடுத்து குசேலரின் கிழிந்த அங்கவஸ்திரத்தில் முடிந்து அனுப்பினாள். குசேலர் கொண்டுசென்ற அவலை கண்ணன் உண்டதும், குசேலரின் குடிசை வீடு பெரும் மாளிகையானது என்று புராணம் கூறுகிறது.



பகவான் கிருஷ்ணரை குசேலர் சந்தித்தது ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழமை. எனவே குருவாயூர் கோவிலில் பக்தர்கள் குருவாயூரப்பனான உன்னிகிருஷ்ணனுக்கு அவல் சமர்ப்பித்து வழிபடுவர். மார்கழி மாத முதல் புதன்கிழமையில் ஸ்ரீகண்ணபிரானுக்கு வீட்டில் அவல் நிவேதனம் செய்து வழிபட் டால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment