Friday 23 December 2016

திருமலை திருவேங்கடமுடையான் அபிஷேகம்!



"...திருவேங்கடமுடையான் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை  4 மணிக்கு மூலவர்  விக்ரகத்திற்கு அபிஷேகம் நடைபெறும்.
  
சுமார் ஒன்பதரை அடிகள் உயரம் கொண்ட இந்த மூலவர் சாளக்கிராமத்தால் செய்யப்பட்ட சிலை. சிற்பிகள் செய்யாத சுயம்பு வடிவமாக தானே உருவாகியது.
 
வைகுண்டத்தில் இருந்து மஹாவிஷ்ணு அர்ச்சாவதரா சொரூபமாக அவதரித்த திருவுருவம் இந்த மூலபிம்பம். 
 
இந்த மூலவருக்கு வெள்ளிக்கிழமை காலை அபிஷேகம் நடக்கிறது. அபிஷகத்திற்கு முன்னால், சுவாமி அணிந்திருக்கும் பட்டு பீதாபரங்கள் பட்டு உத்தரீயம் முதலியவை அகற்றிவிட்டு ஏகாந்தமாக அவருக்கு கௌபீனம் அலங்கரித்து சுவாமியினுடைய திருமேனிக்கு புனுகுதைலம் தடவி அபிஷேகம் ஆரம்பமாகிறது. 
 
வேதபண்டிதர்கள், பக்த சூக்தங்களை பாராயணம் பண்ணிக் கொண்டிருக்க, சுத்தமான தண்ணீருடன் அபிஷேகம் ஆரம்பமாகிறது.
 
பிறகு, பசும்பாலுடன் அபிஷேகம் நடக்கிறது. சுவாமியினுடைய திருவுருவம் சாளக்கிராம சிலையானதால், இவருக்கு பசும்பால் மட்டும்தான் அபிஷேக திரவியமாக உபயோகபடுத்தப்படுகிறது

 
மற்ற விக்ரகங்களுக்கு நடத்தும் தயிர், தேன், இளநீர் முதலிய திரவியங்கள் உபயோகப்படுத்தமாட்டாது. 
 
பசும்பால் அபிஷேகம் முடிந்த பிறகு, திரும்ப சுத்தோதக ஸ்நானம், சுவாமியினுடைய திருமேனி பாலின் பிசுபிசுப்பு அகற்றுவதற்கு பரிமளம் எனும் சுகந்த திரவியம், சந்தனம், குங்கும்பபூ, பச்சகற்பூரம் முதலியவை சேர்ந்த பரிமளம் என்ற திரவியத்துடன் சுவாமியினுடைய திருமேனியை மத்தனம் செய்து பிறகு, சுத்தோதக ஸ்நானம் செய்யப்படுகிறது.
 
இதேசமயத்தில் திருவேங்கடமுடையானின் மார்பில் வலதுபக்கத்தில் இருக்கும் வியூகலட்சுமி என்ற மிகவும் விசேஷமான சக்திவாய்ந்த மகாலட்சுமி உருவத்திற்கு மஞ்சள் காப்புடன் திருமஞ்சனம் நடக்கிறது. 
 
இந்த பரிமளம் சுத்தோதகம் சேர்ந்த தீர்த்தம்தான் அபிஷேகஜலமாக பக்தர்களுக்கு பிறகு, விநியோகிக்கப்படுகிறது.
 
அபிஷேகம் முடிந்து சுவாமிக்கு ஏகாந்தமாக அலங்காரம் நடக்கிறது சுவாமியின் திருமேனியில் இருக்கும் ஈரத்தை தோத வஸ்திரத்தினால் ஒத்தி எடுத்து,24 முழம் நீளம் கொண்ட புதிய வேஷ்டி 12முழ நீளம் கொண்ட பட்டு உத்தரீயம் முதலியவற்றை சுவாமிக்கு அனிவித்து, சுவாமியின் சிரசில் சிறுவா வஸ்திரம் அமைத்து, சுவாமியின் முகபிம்பத்தில் பச்சகற்பூரம் நீர்க்காப்பாக, மெலிதாக அலங்கரித்து, சுவாமியின் நிஜபாத தரிசனம் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது 
 
இந்த சமயத்தில் திருவேங்கடமுடையான் திருமேனியில் நாகபரணம், ஒட்டியாணம் இருக்கும்,ஸ்ரீவத்சம்,கௌஸ்துபம் என்ற மஹாவிஷ்ணுவுக்கே உரிதான அணிகலன்கள் சுவாமியின் மார்பில் அலங்கரிக்கபடுகிறது. 
 
இது நிஜபாத தரிசனம் என்று பெயர். 
 
சுவாமியின் பாதகமலங்கள் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்றன. சுவாமியின் நிஜபாதங்கள் மற்ற நேரங்களில் தங்க கவசங்களினாலும், அர்ச்சனை செய்த துளசிதளங்களினாலும் மறைக்கப்படுகின்றன. இது நிஜபாத தரிசனம்.
 
நிஜபாத தரிசனம் முடிந்த பிறகு, சுவாமிக்கு அலங்காரம் நடக்கிறது. இது சமர்ப்பணா என்று சொல்லுவார்கள் இது ஏகாந்தமாக நடக்கும். கதவு சாத்தப்பட்டிருக்கும், அர்ச்சகர்கள் மட்டும்தான் கர்ப்பாலயத்தில் இருந்து சுவாமிக்கு அலங்காரம் நடத்திக்கொண்டிருப்பார்கள்.
 
முதலில் சுவாமியின் முகத்தில் பச்சை கற்பூரத்தை திருநாம்மாக அணிவித்து, அதன் நடுவில் கருப்பு நிறமான கஸ்தூரி திலகம் மூங்கில் இலைபோன்ற வடிவத்தில் அமைத்து, பிறகு, சுவாமியின் முகத்தில் புனுகு தைலம் லேபனம் செய்து புதிய பட்டு வேஷ்டி உத்தரீயங்களை அணிவித்தபிறகு சுவாமியின் திருவாபரணங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அணிவிக்கப்படுகின்றது. 
 
கடைசியாக கிரீடம் அணிவிக்கப்படும். பிறகு சுவாமியின் திருமார்பில் இருக்கும் தங்கலட்சுமி உருவத்துக்கு குலசேகரப்படியின் உள் பக்கம் ஏகாந்தமாக திருமஞ்சனம் நடத்தி, தாயாருக்கு பட்டுவஸ்திரம் அணிவித்து ஸ்வாமியின் திருமார்பில் அலங்கரிக்கப்பட்ட பிறகு, ஸ்வாமிக்கு நவநீதம் அம்சையாகிறது. பிறகு, பச்சை கற்பூர ஆரத்தி நடக்கிறது.
 
இதன்பிறகு தோமாலை சேவை ஆரம்பாகும்.
 
 
 
 

No comments:

Post a Comment