Friday 23 December 2016

பத்மாவதி தாயார் பஞ்சமி நீராட்டு!


கார்த்திகை பிரம்மோற்சவம் என்பது தாயாரின் பிறந்த நாள் கொண்டாட்டமாகும்!



கார்த்திகை மாத  வெள்ளிக்கிழமை, சுக்ல பஞ்சமி, அபிஜித் லக்கினத்தில், உத்திராடம் நக்ஷத்திரத்தில்  பத்மாஸரோவர் புஷ்கரணியில், ஆயிரம் இதழ்கள் கொண்ட தங்கத்   தாமரையில் பத்மாவதித் தாயார் அவதரித்தார்.



பத்மாவதி தாயாருக்கு திருமலையப்பனின் பஞ்சமி சீர்வரிசை!

தாயாரின் பிறந்த நாளன்று கார்த்திகை சுக்ல பஞ்சமியன்று திருமலையிலிருந்து தாயாருக்கு சீராக


இரண்டு யானைகளின் மேல் வைத்து,



மஞ்சள், குங்குமம், 2 பட்டு புடவைகள், 2 பட்டு இரவிக்கைகள், துளசி மாலை, ஒரு தங்க மாலை,



51 இனிப்பு வகைகள், 51 பெரிய லட்டுகள், 51 வடைகள், 51 அப்பங்களை, 51 தோசைகள், நடைப் பயணமாக கொண்டு வந்து சமர்ப்பிப்பார்கள்.

இவற்றை முதலில் எம்பெருமானுக்கு சமர்ப்பித்து, பின்னர் புது கூடையில் வைத்து வூர்வலமாகக் கொண்டு செல்வர்.




இவ்வூர்வலம் மங்கள வாத்தியங்களுடன், ஆடல், பாடலுடன் மலைவழிப் பாதையில் அலிபிரி, கோதண்டராமர் சந்நிதி, கோவிந்தராஜ ஸ்வாமி சந்நிதி வழியாக திருச்சானூர் சென்று, திருச்சானூர் மாடவீதியில் வழியாக சென்றடையும்.

இந்த சீர்வரிசையை தாயாருக்கு வழங்கிய பின்னரே பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கரஸ்நானம் தொடங்கும்.



வேத முழக்கங்கள், மங்கள வைத்தியங்கள் மத்தியில் பத்மாஸரோவர் புஷ்கரணியில்  தாயாருக்கும், ஸ்ரீ சக்கரத்திற்கும் திருமஞ்சனம் நடைபெறும்.





இந்நிகழ்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள்  பத்மாஸரோவர் புஷ்கரணியில் நீராடி, தாயாரை தரிசனம் செய்து,

பல கோடி ஜென்ம புண்ய பலனை அடைவார்கள்!




 

No comments:

Post a Comment