Monday 4 April 2016

மங்கள கௌரி நோன்பு!

 
 சம்பத் கௌரி மஹா மந்திரம்


ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம் ஹ்ரீம்
நமோ பகவதி ஸர்வார்த்த ஸாதகி

ஸர்வலோக வசங்கரீ
ஸர்வ ஸௌபாக்ய ஜனனீ
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் சம்பத்கௌரி
மம வசம் குருகுரு ஸ்வாஹா

 
ஆடி அமாவாசை அடுத்து வரும் செவ்வாய்கிழமையிலிருந்து இந்த நோன்பு ஆரம்பம். கல்யாணமான புதுப்பெண்கள், பிறந்த வீட்டுக்கு வந்து நான்கு வார செவ்வாய்கிழமையும் இந்த நோன்பை பக்தியுடன் செய்வார்கள். ஐந்தாவது வார செவ்வாயன்று சுமங்கலிப் பெண்கள் அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய நோன்பு இந்த மங்கள கௌரி  நோன்பு.

மங்கள கௌரி

 
வீட்டில் அம்மனை அலங்கரித்து, புரோகிதர் மந்திரம் சொல்ல அட்சதை, பூவுடன் பூஜை செய்வார்கள். பூஜை முடிந்து கையில் மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள்.




 இந்த நோன்பில் முக்கியமானது (இரண்டு புதிய முறங்கள் ), மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பா கொடுத்தல், பிளாஸ்டிக் டப்பாவில் வெற்றிலை,பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம், பூ, ரவிக்கைத் துணி, காசு, அரிசி, வெல்லம், பருப்பு வகைககள், கண்ணாடி வளையல், கண்ணாடி, சீப்பு போன்ற மங்களகரமான பொருள்கள் அனைத்தையும் போட்டு, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்வார்கள்.
 


பிறகு, பூஜை செய்பவர்கள், சுமங்கலிகளை பலகையில் உட்கார வைத்து இதைக் கொடுத்து சந்தனம், குங்குமம் கொடுத்து பூவும் கொடுப்பார். பின் டப்பாவை புடைவை முந்தானையின் இருபுறமும் பிடித்துக்கொண்டு, ( வாங்கும் சுமங்கலியும் முந்தானையால் இருபுறமும் பிடித்துக்கொள்வார்). சுமங்கலி சுமங்கலி இந்த மங்களப் பொருட்களை உனக்குக் கொடுக்கிறேன்... வாங்கிக்கொள்... என்று சொல்லிக் கொடுப்பார். வாங்குபவர் நானும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு உன்னை மனமார ஆசீர்வதிக்கிறேன் என்று சொல்லி அட்சதை போடுவார். வந்திருக்கும் அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து, பாட்டுப் பாடி மிகக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.


நோன்புக்கு செய்ய வேண்டியவை :

தெம்பிட்டு : கால்கிலோ அரிசி மாவில் வெல்லத்தை சீவி போட்டு, மாவை கட்டியில்லாமல் கிளறி, சிறிது நெய் விட்டு பிசைந்து உருண்டை பிடித்து வைப்பார்கள்
.

சிகிலி : எள்ளை வறுத்து இடித்து, (மிக்ஸியில் போட்டும்) வெல்லம் சேர்த்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்வார்கள்
.

கோசம்பரி : பயத்தம் பருப்பை பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதில் கேரட், மாங்காய், வெள்ளரித் துருவல், தேங்காய்த் துருவல், உப்பு தேவையான அளவு கலந்து கறிவேப்பிலை, மல்லி, எலுமிச்சைச் சாறு சேர்க்க ருசியான கோசம்பரி ரெடி
.

இம்மூன்றையும் நைவைத்தியம் செய்து, எல்லோருக்கும் கொடுப்பார்கள்
.

கெஜவஸ்திரம் அதாவது பஞ்சினால் செய்த பூமாலை


வசதியில்லாதவர்கள்கூட இந்த நான்கு பொருளையும் அம்பாளுக்குச் சமர்ப்பணம் செய்தால், நாம் வேண்டும் வரம் தருவாள் என்பது ஐதீகம். தெலுங்கு, கன்னட இனத்தவர்களின் முக்கிய பண்டிகை இந்த மங்கள கௌரி நோன்பு.






No comments:

Post a Comment