Tuesday 10 May 2016

செல்வம் தரும் லாவண்ய கௌரி விரதம்!


சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி  திதி  லாவண்ய கௌரி விரதம். அக்ஷய திருதியை அடுத்து வரும் பஞ்சமி திதி!

லாவண்ய கௌரி விரத நாளில் மகாலக்ஷ்மியை பூஜிக்கறது சிறப்பு.



நின்ற கோலத்தில் உள்ள  மகாலக்ஷ்மியை அலங்கரித்து நெய் தீபம் ஏற்றி மல்லிகை மலரால் அர்ச்சித்து கனகதார ஸ்தோத்ரம், குபேர ஸ்தோத்ரம், சொல்ல செல்வம் பெருகும்.
 
மகாலக்ஷ்மி கௌரி;  varanasi temples 

மகாலக்ஷ்மிக்கு குங்கும அர்ச்சனை விசேஷம்.

ஸ்ரீ விஷ்ணுவின் ப்ரேரணையால் தேவர்களும் அஸுரர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது, பாற்கடலிலிருந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றிய நன்நாளே ஸ்ரீபஞ்சமி அல்லது லக்ஷ்மி பஞ்சமி எனப்படுகிறது. 


சைத்ரமாத சுக்லபக்ஷ பஞ்சமியான இன்று ஸ்ரீ விஷ்ணுவுடன் ஸ்ரீ லக்ஷ்மீ தேவியை பூஜை செய்து மல்லிகைப்பூவால் லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து லக்ஷ்மீ ஸ்தோத்ரம் சொல்லிப் ப்ரார்த்தித்தால் லக்ஷ்மீ கடாக்ஷம் ஏற்படும். ஏழ்மை விலகும்.
  

* சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்டலோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.






 

No comments:

Post a Comment