Tuesday 9 August 2016

பூவனூர் சாமுண்டீசுவரி அம்மன் சர்க் கரை பாவாடை திருவிழா!

சாமுண்டீசுவரி அம்மன்

திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் அருகே பூவனூரில் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கற் பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சாமுண்டீசுவரி ஆகிய 3 அம்மன் சன்னதிகள் இருப்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இதில் சாமுண்டீசுவரி அம் மன், கர்நாடக மாநிலம் மைசூ ருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.

இங்கு விஷக்கடியால் பாதிக்கப்பட் டவர்களுக்காக நடைபெறும் சிறப்பு பூஜைகள் பிரசித்தி பெற்றவை. இதில் கலந்து கொள்ள வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கோவி லுக்கு வருகை தருகிறார்கள்.

சர்க்கரை பாவாடை திருவிழா!

திருநாவுக்கரசரால் தேவா ரம் பாடல் பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத் தில் சாமுண்டீசுவரி அம் மனுக்கு சர்க்கரை பாவாடை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

சர்க்கரை பாவாடை திருவிழா என்பது ஒருவகை யான வினோத திருவிழா ஆகும். இவ்விழாவின்போது சாமுண்டீசுவரி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடை பெறும்.

பின்னர் சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டு அதில் அம்மன் உருவம் காட்சி அளிக்கும்போது தீபாராதனை காட்டப்படும். இவ்வாறு சர்க் கரை பாவாடை திருவிழா கொண்டாடப்படுகிறது.
 

No comments:

Post a Comment