Monday 20 June 2016

நித்யமும் மங்களங்களை அருளும் நித்யா தேவி!

இந்த அம்பிகை எப்போதும் இருப்பவள். அழிவில்லாதவள். காலநித்யா வடிவினள். நித்யா என்ற மந்திர வடிவானவள். முக்கண்ணி. பன்னிரண்டு கரங்கள் கொண்டவள். கணக்கற்ற சக்தி கூட்டங்கள் இவளைச் சுற்றி வட்ட வடிவில் அமர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வாத்மிகா எனும் திருநாமம் கொண்ட இத்தேவி இயங்கும் பொருட்களை இயக்கும் சக்தியாகத் திகழ்கிறாள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாகத் திகழும் இவள் உதயசூரியனின் நிறம் போல பிரகாசிப்பவள். மந்தகாசம் பொங்கும் திருமுகமண்டலம் உடையவள்.



பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களிலே பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, கரும்புவில், புஷ்பபாணம், கேடயம், வாள், சூலம், கபாலம் ஆகியவற்றைத் தரித்து அபய வரத முத்திரையுடன் காட்சி அளிப்பவள். புவியில் உள்ள சகல ஜீவராசிகளையும் அவரவர் கர்ம வினைக்கேற்ப ஆட்டுவிப்பவள்.

ஆத்மானந்த சுகம் அருள்பவள். நமது துன்பங்களை நீக்கி இன்பம் தருவதற்காக இன்முகத்தோடு வீற்றுள்ளாள். இவளைப் போற்றி வணங்கினால் மாயையை நீக்கி ஆத்ம ஞானத்தை அருள்வாள். இந்த அம்பிகையின் புனிதமான திருவடிகளைப் பற்றினால் சகலவிதமான தொல்லைகளும் தானே விலகும். தடைகள் விடைபெறும். தடங்கல்கள் தவிடுபொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் நம்மை வந்தடையும். ஸௌந்தர்ய ரூபவதியான இத்தேவி பக்தர்களின் மனதைக் கவரும் பச்சைப்பசும்கிளி. மங்களமே வடிவான இவள் தன்னை அண்டியவர்க்கு மங்களங்களைத் தருபவள். தன் திருவடியைப் பற்றியவரின் துன்பங்களைத் தொலைப்பவள். பெருங்கருணையும், பேராற்றலும் கொண்டவள்.

‘ப்ரகல்பா’  என்றொரு நாமம் அம்பிகைக்கு உண்டு. பிரகல்பா எனில் துணிச்சல் நிறைந்தவள் என்று பொருள். பற்றற்றவர்களிடம் இயல்பாகவே துணிச்சல் நிறைந்திருக்கும். “துறவிக்கு வேந்தனும் துரும்பு” என்று கருதும் துணிச்சல் நிறைந்திருக்கும். முத்தொழில்களை மிகுந்த துணிச்சலுடன் ஏற்று எளிதில் நடத்துபவள். அசுர சக்திகளை ஊதித் தள்ளும் அற்புதத் துணிச்சல் உள்ளவள். கிராமதேவதைகளாக இருந்து, எவரும் நடமாட அஞ்சும் நள்ளிரவில் துணிச்சலுடன் காவல் புரிபவள் அம்பிகை. அம்பிகைக்கு ஏது அச்சம்? எல்லாமே துச்சம்! அவள் துணிவில் உச்சம்!

பரம பாகவதரான குசேலர் மிக வறுமையான நிலையில் இருந்தபோது, மனைவி சுசீலையின் வேண்டுகோளை ஏற்று பால்ய நண்பரான கிருஷ்ணனை தரிசிக்க துவாரகை சென்றார். சிந்தனை முழுவதும் கண்ணனின் நாமத்தையே கொண்டு கால்நடையாகவே துவாரகை வருகிறார். கண்ணன் குசேலரைப் பார்த்ததும் ஆனந்தம் கொண்டு கட்டி அணைத்து தன் அருகே அமர்த்தி உபசரிக்கிறார். மகாலட்சுமியான ருக்மணி தேவியும் உடனிருந்து குசேலருக்கு அர்க்யம், பாத்யம் கொடுத்து விசிறிவிடுகிறாள். குசேலர் பிரமித்துப்போய் பேச முடியாமல் பரவசமாகி, லட்சுமிதேவியோடு கூடிய கிருஷ்ணனைக் கண்டு மெய்மறந்த நிலையை அடைந்தார்.

கிருஷ்ணன் குசேலருடைய வறுமையை நீக்கி அவருக்கு ஐஸ்வர்யங்களை அருள திருவுள்ளம் கொண்டாலும், அந்த சக்தி தேவிக்குதான் உண்டென்பதால் லட்சுமி கடாட்சம் குசேலருக்குக் கிடைக்க வேண்டுமென்று நினைத்தார் பரந்தாமன். அடுத்த வினாடி தேவி கண்ணனைப் பார்த்து, “சுவாமி! இவர் எந்த திக்கிலிருந்து வருகிறார்?” என்று வினவுகிறாள். கண்ணபிரானும் இதுவே தருணமென்று, “இதோபார் தேவி! இந்த திக்கிலிருந்துதான் வருகிறார்” என்றவுடன், கருணாசாகரியான மகாலட்சுமி அந்த திசையில் தன் அருட்பார்வையை வீசுகிறாள். அந்த நிமிடமே அஷ்ட ஐஸ்வர்யங்களும் ஓடிப்போய் குசேலருடைய இல்லத்தை நிரப்புகின்றன.

பொதுவாக நம் இல்லத்திற்கு யாரேனும் வந்தால் “இவருக்கு எந்த ஊர்?” என்றுதானே கேட்போம். மகாலட்சுமியை திசை என்று கேட்க வைத்து, தேவியின் அருள் குசேலருக்குக் கிடைக்க வைத்தார் மாதவன். நாம் அம்பிகையிடம் பிரார்த்திக்கும்போது, “எனக்கு அதைக்கொடு, இதைக்கொடு” என்று யாசிக்கவே கூடாது. நாம் கேட்காமலேயே கடாக்ஷித்து விடுவாள் அம்பிகை. நாம் தேவியிடத்தில் பரிபூரணமான பிரேமையை மட்டும் வைத்தால் போதும்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தால் அத்தனை பேரும் அவதிப்பட்டார்கள். ஸ்ரீபரமேஸ்வரன் எல்லாரையும் ரட்சிக்கும் பொருட்டு அந்த விஷத்தை அருந்தி நீலகண்டன் என்ற திருநாமம் பெற்றார் என்பது யாவரும் அறிந்ததே. சங்கரனார் விஷத்தை கையில் ஏந்தியபொழுது அம்பிகையான பார்வதிதேவி தன் கடாக்ஷத்தினாலேயே நஞ்சை அமிர்தம் ஆக்கிவிட்டாள். அந்த அம்பிகை அமிர்தேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்.

வடமொழியில் அக்ஷி என்றால் கண்களைக் குறிக்கும். இதனாலேயே பராசக்தியான அன்னை காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்றெல்லாம் நாமம் கொண்டு பார்வை ஒன்றினாலேயே உலகத்தை ரட்சித்து வருகிறாள். காமாட்சி அன்னைக்கு கண்களை வைத்தே அந்த நாமம் ஏற்பட்டது.

சீர்காழியில் சிவபாத ஹ்ருதயருடைய குழந்தையின் அழுகுரலைக் கேட்டு ஓடோடி வந்து ஞானப்பாலை ஊட்டி ஞானசம்பந்தராக ஆக்கிவிடுகிறாள் அம்பிகை. பரமேஸ்வரனும் கருணாமூர்த்திதான். இருந்தாலும் ஈசன் அன்னை உருக்கொண்டு, தானே தாயாக வந்து ரத்னாவளி என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்து தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரராக அருள்புரிந்தார்.

யுகம் யுகமாக துர்வாசர், தௌம்யர், தத்தாத்ரேயர், சுகர் போன்ற ஞானிகள் அம்பிகையை ஆராதனை செய்து ஆத்மானுபவத்தைப் பெற்றார்கள். ஆதிசங்கரரும் அம்பிகை மீது எண்ணற்ற பாடல்களைப் பாடி மகிழ்ந்தார். அவற்றுள் ஸ்தோத்திர சிகரமாகத் திகழும் சௌந்தர்யலஹரிதுதியில் தேவியின் கடாக்ஷ வைபவத்தைப் பற்றி பல பாடல்களில் வர்ணிக்கிறார்.

சோழ நாட்டில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய அபிராமி பட்டர் என்ற தேவி பக்தர் அம்பிகையைக் குறித்து “அபிராமி அந்தாதி” என்ற நூறு பாடல்களைப் பாடி அன்னையின் கடாக்ஷம் பெற்றார். அன்னையின் கடைக்கண்களைப் பற்றி, “தனம் தரும் கல்வி தரும்” என்று பாடிப் போற்றுகிறார். அந்தாதியின்  “விழிக்கே அருள் உண்டு” என்ற பாடலைப் பாடி முடித்தவுடனே அபிராமியம்மை அவருக்கு காட்சியளித்து அருளினாள்.

நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கண் அருளிய காமலோசனி, அருட்பிரகாச வள்ளலாருக்கு அன்னையாக வந்து அன்னமிட்ட அற்புதங்கள்... “கருணைக் கொடியே, ஞான சிவகாமி அருளுகவே” என்று பாடி உருகுவதைக் காண்கிறோம்.ஸ்ரீரங்கம் தலத்தில் பெருமாளுக்கு நடக்கும் உற்சவத்தில் ஒருநாள் தாயாருக்கு அலங்காரம் செய்வார்கள். பெருமாளை தாயாரைப்போலவே மிகவும் நேர்த்தியாக அலங்கரித்திருப்பார்கள். இதை அனுபவித்த ஆழ்வார், “பெருமாளே! நீ என்னதான் தாயார் வேடம் பூண்டாலும், தாயாருடைய நயனங்களில் உள்ள கருணையைக் காணமுடிய வில்லையே” என்று பாடினார்.

அம்பிகையின் கடைக்கண் கருணை கிடைத்தாலே நாம் உயர்ந்து உன்னதமாக இருப்போம். அம்பிகையின் கருணையைப் பெற நாமும் தகுதியுடன் இருக்க வேண்டாமா? தூய்மையான உள்ளத்தோடு அன்னையை வணங்கி, மகான்கள் அருளிய பாடல்களைப் பாடி அவள் அருளைப் பெறுவோம். அம்பாள்தான் பிரம்மத்தின் சக்தி. அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து, அவளை உபாசிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள். திருவடிகளைப் பணிந்து அனைத்து வளங்களும் பெறுவோம்.

வழிபடு பலன்:


சிவானந்தம் அடைய, பெரியோர் ஆசி கிட்ட, இந்த அம்பிகை அருள்வாள். சரீர பலம் தந்து ஆன்மிக மேம்பாட்டையும் முயல்பவர்களுக்கு அஷ்டமாஸித்திகளையும் அருள்பவள்.

நித்யா நித்யா காயத்ரி

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகினி ப்ரசோதயாத்.

மூல மந்த்ரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹஸகரலடைம் ஹஸகரலடீம்
ஹஸகரலடௌ:

த்யான ஸ்லோகங்கள்:

உத்யத் பாஸ்கர பிம்பாபாம் மாணிக்ய மகுடோஜ்வலாம்
பத்மராக க்ருதா கல்பாம் அருணாம் ஸுகதாரிணீம்
சாருஸ்மித லஸத் வக்த்ராம் ஷட்ஸரோஜ விராஜிதாம்

ப்ரதிவக்த்ரம் த்ரிநயனாம் புஜைத்வாத ஸாபிர்யுதாம்
பாஸாங்குச புண்ட்ரேக்ஷு சாப கேட த்ரிஸூலகாம்
வரம் வாமேததானாம் சாப்யங்குஸம் புஸ்தகம் ததா
புஷ்பேஷு மண்டலாக்ரம்ச கபாலமபயம் ததா

ததானாம் தக்ஷிணை ஹஸ்தை: த்யாயேத் தேவீமனன்யதீ:
லோஹிதாம் லோஹிதாகார சக்தி வ்ருந்பிநிஷேவிதாம்
லோஹிதாம் சுகபூஷாஸ்ரர் லேபநாம் ஷண்முகாம்புஜாம்.

த்யாயேத் தேவீம் மஹேஸானீம் கதம்ப வனமத்யகாம்
ரத்ன மண்டப மத்யேது மஹாகல்ப வனாந்தரே
முக்தாபத்ர சாயாயாம் ரத்ன ஸிம்ஹாஸனேஸ்திதாம்
அனர்க்க ரத்ன கடித முகுடாம் ரத்ன குண்டலாம்
ஹாரக்ரைவேய ஸத்ரத்ன சித்ரிதாம் கங்கணோஜ்ஜ்வலாம்

க்ஷீர முக்தா லஸத்பூஷாம் ஸுக்ல க்ஷௌம விராஜிதாம்
ஹீரமஞ்ஜீர ஸுபகரக்தோத்பல பதாம்புஜாம்
ஸுப்ராங்கராக ஸுபகாம் கற்பூர ஸகலோஜ்வலாம்
புஸ்தகம் சாபமபயம் வாமே தக்ஷிணேக்ஷ மாலிகாம்
வரதான ரதாம் நித்யாம் மஹாஸாரஸ்வத ப்ரதாம்
ஸுப்ரவஸ்த்ராபனாம் ரம்யாம் சந்த்ரகுந்த ஸமுத்யுதிம்

ஸுப்ரஸன்னாம் ஸஸிமுகீம் நாநாரத்ன விபூஷிதாம்
அனந்த முக்தாபரணம் ஸ்ரவந்தீ மம்ருதத்ரவம்
வரதாபய ஸோபநாட்யாம் ஸ்மரேந்நீல பதாகினீம்.

பாலாதீதாம் பானு கோடி ப்ரகாசாம்
மூலாதாரம்போருஹஸ்தாம் மஹேசீம்
பாலாம் பந்தூக ப்ரபாம் பங்கஜாக்ஷீம்
தேவீம் நித்யாம் ஸந்ததம் பாவயாமி.
உத்யந்பரயோதநநிபாம் ஜபாகுஸுமஸந்நிபாம்

ஹரிசந்தன லிப்தாங்கீம் ரக்தமால்ய விபூஷிதாம்
ரத்னாபரண பூஷாங்கீம் ரக்த வஸ்த்ர ஸுஸோபிதாம்
ஜகதம்பாம் நமஸ்யாமி நித்யாம் ஸ்ரீபரமேஸ்வரீம்.

ஸ்ரீஸுக்த நித்யா நித்யா ஸ்லோகம்
ஸ்ரீஸுக்த ஸமஸ்துதாம் ல்ரூகார ப்ருக்ருதிக, சாந்தி
கலாத்மிகாம் ஸ்ரீநித்யா நித்யா ஸ்வரூபாம் ஸர்வஸித்தி
ப்ரத சக்ர ஸ்வாமினீம் தைர்யாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபிணீம்

ஸ்ரீ ஹ்ருஷீகேச வக்ஷஸ்தலகமல வாஸினீம் ஸர்வ
மங்கள தேவதாம் ஸ்ரீபுஷ்டிலக்ஷ்மி ஸ்வரூப
ஸ்ரீ நித்யா நித்யா தேவ்யை நம:

வழிபடவேண்டிய திதிகள்:

சுக்ல பக்ஷ தசமி/ க்ருஷ்ணபக்ஷ சஷ்டி (தசமி திதி ரூப நித்யா நித்யாயை நம:)

நைவேத்யம்

கருப்பு எள்ளினால் செய்யப்பட்ட உணவுவகைகள்.

பூஜைக்கான புஷ்பங்கள்:
பல வண்ணப் பூக்கள்.

திதி தான பலன்:
கருப்பு எள்ளால் செய்யப்பட்ட உணவு வகைகளை தேவிக்கு நிவேதனம் செய்து தானமளித்தால் யம பயம் அகலும்.

பஞ்சோபசார பூஜை:
ஓம் நித்யா நித்யா தேவ்யை கந்தம் கல்பயாமி நம:
ஓம் நித்யா நித்யா தேவ்யை தூபம் கல்பயாமி நம:
ஓம் நித்யா நித்யா தேவ்யை தீபம் கல்பயாமி நம:
ஓம் நித்யா நித்யா தேவ்யை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் நித்யா நித்யா தேவ்யை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள் :

தர்மவான்கள்,  செல்வந்தர்கள், மனைவி மக்கள், நண்பர்களுடன் கூடியவர்கள், நீதிமான்கள், அறிவாளிகள். பெரும்பாலும் உண்மையையே பேசுபவர்கள். இத்திதியில் பிறந்தோர் தேவியின் காயத்ரி மந்திரத்தை தினமும் 44 முறை பாராயணம் செய்து வந்தால் அல்லல்கள் அகன்று வாழ்வு வளம் பெறும்.

யந்திரம் வரையும் முறை

சந்தன குங்குமக் கலவையால் அறுகோணம், வட்டம், அறுகோணத்தின் வெளியில் பதினாறு இதழ்களுள்ள முப்பத்தாறு கமலங்கள் அல்லது 32 இதழ்களுள்ள பதினெட்டு கமலங்களை உள்ளேயும் வெளியேயும் வரையவும். தேவியின் ஆயுதங்கள், சப்தமாதர்கள், மாத்ருகா சக்திகள் போன்றோரை தியானம் செய்து பூஜிக்கவும்.

இத்திதிகளில் செய்யத் தகுந்தவை:


 மங்களகரமான செயல்கள், உடற்பயிற்சி, பிரயாணம், புதுமனை புகுதல், குறிப்பிட்ட நபரைக் காணச் செல்லுதல், நீர் சம்பந்தமான செயல்கள் போன்றவை.

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ தசமி திதி துதி:

தசமியெனும் சாக்கிரத்துக் கப்பாலேறிச்
சிலம்பொலியும் நினது திருத்தாளுங்கண்டு
நிசமான தூல சூக்குமதோடொன்றி
நிஷ்களத்தில் உன்னுடன் நான் ஒன்றேயாகி
அசையாத ஆனந்த மயமாய் நிற்க
அருள்புரிவாய் வரமருளானந்த ரூபி
சுசிகரமாய்ப் பிள்ளைமுகம் பார்த்தாட்கொள்வாய்
சோதியே மனோன்மணியே சுழிமுன வாழ்வே!

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ தசமி திதி துதி:

உன்னுடைய கிருபை வைத்துத் தவத்தைப் பெற்றே
ஒன்றாகி இரண்டாகி ஆறுமாகி
தன்னுடைய தீக்ஷை வைத்து ஞானம் தந்த
சங்கரியே சாம்பவியே சாகாக் காலே
கன்னிகையே மதுரசமான தேவி
கற்பகமே கனகப்ரகாசமான
தன்னுதிரு சுழிமுனையிலாடுந் தேவி
சோதி மனோன்மணித்தாயே சுழிமுனைவாழ்வே!

மாத்ருகா அர்ச்சனை:

ஓம் நித்யாயை நம:
ஓம் பைரவ்யை நம:
ஓம் ஸூக்ஷ்மாயை நம:
ஓம் ப்ரசண்டாயை நம:
ஓம் ஸத்கதிப்ரதாயை நம:

ஓம் ப்ரியாயை நம:
ஓம் ருத்தாயை நம:
ஓம் ஸூக்ஷ்காயை நம:
ஓம் ரக்தாங்காயை நம:
ஓம் ரக்தலோசனாயை நம:

ஓம் கட்வாங்கதாரிண்யை நம:
ஓம் ஸங்காயை நம:
ஓம் கங்காலாயை நம:
ஓம் காலவர்ஷிண்யை நம:
ஓம் ஹிமக்னநயனாயை நம:

ஓம் வ்ருத்தாயை நம:
ஓம் பூதநாதாயை நம:
ஓம் பூதபவ்யாயை நம:
ஓம் துர்வ்ருத்த ஜன ஸம்மதாயை நம:
ஓம் புஷ்போத்ஸவாயை நம:

ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் புண்யபாபவிவேகின்யை நம:
ஓம் திக்வாஸக்ஷௌமவாஸாயை நம:
ஓம் ஏகவங்ஸத்ரஜடாதராயை நம:
ஓம் ஜ்வாலாமாலின்யை நம:

ஓம் கண்டாதராயை நம:
ஓம் தனுர்தராயை நம:
ஓம் டங்கஹஸ்தாசலாக்ராஹ்யை நம:
ஓம் ஹாகின்யை நம:
ஓம் ஸாகின்யை நம:

ஓம் ரமாயை நம:
ஓம் ப்ரஹ்மாண்டபாலிதமுகாயை நம:
ஓம் விஷ்ணுமாயா சதுர்புஜாயை நம:
ஓம் அஷ்டதஸபுஜாபீமாயை நம:
ஓம் விசித்ர சித்ர ரூபிண்யை நம:

ஓம் பத்மாஸன பத்மவஹாயை நம:
ஓம் ஸ்புரத்காந்தி ஸுபாவஹாயை நம:
ஓம் மோஹின்யை நம:
ஓம் மௌலின்யை நம:
ஓம் மான்யாயை நம:

ஓம் மானதாமானவாதின்யை நம:
ஓம் ஜகத்ப்ரியாயை நம:
ஓம் விஷ்ணுகர்ப்பாயை நம:
ஓம் மங்களாமங்களப்ரியாயை நம:
ஓம் பூதிர்பூதிகாயை நம:

ஓம் பாக்யாயை நம:
ஓம் போகீந்த்ரஸயனாமிதாயை நம:
ஓம் தப்தசாமிகரிக்ருதாயை நம:
ஓம் ஆர்யவம்ஸவிமர்தின்யை நம:
ஓம் அதௌகவர்ஷணீஸவாயை நம:
ஓம் க்ருதாந்தாயை நம:



No comments:

Post a Comment