Monday 20 June 2016

வேண்டுவன அருளும் சிவதூதி நித்யா!


புஷ்கரம் எனும் தலத்தில் உள்ள அம்பிகைக்கு சிவதூதி எனும் திருநாமம் உண்டு. இந்த அம்பிகை ஈசனாலேயே உபாசிக்கப்பட்டவள். சதுஷ்கூட வித்யையின் வடிவாகப் பொலிபவள். ஒளி பொருந்திய ரத்ன சிம்மாசனத்தில் வீற்றருள்பவள்.





வேனிற்காலத்து பகல் வேளை சூரியனின் ஒளி பொருந்தியவள். வீராசனக் கோலத்தில் பேரழகுப் பெட்டகமாய் காட்சி தருகிறாள். புன்னகை பொலியும் அன்னையின் திருமுகம் சந்திரனைப் பழிப்பது போல் உள்ளது.

முக்கண்ணி, எட்டுத் திருக்கரங்கள். எட்டும் பகையை வெட்டிக்களைபவள்.  தன் திருக்கரங்களில் அங்குசம், பாசம், வாள், கட்கம், கதை, தாமரை, பானபாத்திரம் போன்றவற்றை ஏந்தியருள்பவள். ரத்னாபரணங்கள் தேவியின் அழகுக்கு அழகு செய்கின்றன. பாதங்களைப் பற்றினால் சகல போகங்களும் சித்திக்கும் என சொல்லாமல் சொல்கின்றதோ தேவியின் பாதங்கள். வரம் தரும் அத்திருப்பாதங்களை மனம், மொழி, மெய்களால் துதித்துப் பேரானந்தம் அடைவோம்.

செந்நிற ஆடை பூண்டு, நவரத்ன கிரீடம் அணிந்து கோடை காலத்தில் துலங்கும் மதியநேர சூரியன் போல பூரண ஒளிமிக்கவளாகக் காட்சி தருகிறாள் சிவதூதி நித்யா. இவள் பூண்டிருக்கும் நானாவிதமான ஆபரணங்களின் ஒளியால், இவளது உருவத்தின் ஒளி இன்னும் கூடி தேஜோமயமாக காட்சி தருகிறாள்.

புன்முறுவல் பூத்த முகமும் எட்டு திருக்கரங்களும் கொண்டு விளங்கும் தேவியைச் சுற்றிலும் நின்று மகரிஷிகள் பாடித் துதிக்கிறார்கள். தன் இடக்கைகளில் பாசம், கேடயம், கதை, ரத்னங்கள் நிரம்பிய பாத்திரம் ஆகியவையும், வலக்கைகளில் அங்குசம், கக்தி, கோடரி மற்றும் தாமரையை ஏந்தியபடி காட்சிதரும் சிவதூதி, தீமைகளை அழித்து நன்மை அளிப்பவள்.

சும்ப நிசும்பர்கள் எனும் அசுரர்களால் உலகுக்கு துன்பம் உண்டானபோது, தேவர்கள் அனைவரும் அம்பிகையைத் துதித்தார்கள். அப்போது அம்பிகையிடமிருந்து ஒரு தேவி தோன்றினாள். தீய சக்தி களை அழிப்பதற்காகவே தோன்றி இருந்தாலும், அவர்களும் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்க எண்ணினாள் தேவி. பகைவனுக்கும் அருளும் பண்பாடு இவளுக்கு, அதனால் தான் தோன்றக் காரணமான அந்த பரமேஸ்வரனையே அழைத்து சும்ப நிசும்பர்களிடம் தூதாக அனுப்பினாள். இந்த அம்பிகை சிவனை தூதனாகக் கொண்டவள்.

சும்ப, நிசும்பர்களிடம் பராசக்தி யுத்தம் தொடங்கும் முன் அவர்களிடம் ஈசனை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமானையே தூதாக அனுப்பியதால், இவளுக்கு சிவதூதி என்று பெயர்.இந்த தேவி.

நேர்வழியில் நடப்பவர்களுக்கும், அடுத்தவரைக் கெடுக்க நினைக்காத மனம் கொண்டவர்களுக்கும் அருளைவாரி வழங்குபவள். தன்பக்தன் ஆசைப்படும் எல்லாவற்றையும் அளித்து அவனை சந்தோஷப்படுத்துபவள். அதேசமயம் அவனுக்கு எதிராக உள்ள எல்லாவற்றையும், அவனுக்குத் தீங்கு செய்யும் எந்த சக்தியையும் அழிக்கவும் இவள் தயங்குவதில்லை.தேவரும், முனிவரும் இவள் புகழ் பாடுகின்றனர்.

தன் அடியவர்களின் துன்பங்களை நீக்கி இன்பங்களை வாரி வாரி வழங்குபவள். சகல விதமான மங்களங் களையும் தன் அடியார்களுக்கு அருள்பவள். மனித மனம் விரும்பியவைகளில் நியாயமானவற்றை நிறைவேற்றுபவள். மனதில் நல்ல எண்ணத்துடனும் மன நிறைவுடனும் சிவதூதியை அதற்குரிய வழிமுறையில் ஆராதனைகள் செய்தால், சிறப்பான பலன்கள் உண்டாகும்.

உதாரணமாக, தேங்காயும் வெல்லமும் சேர்த்து ஹோமம் செய்தால் நிறைந்த ஐஸ்வர்யம் உண்டாகும். செங்கழுநீர் பூவை நெய்யில் தோய்த்தும், செந்தாமரைப் பூவை பாலில் தோய்த்தும், செண்பகப் பூவை த்ரிமதுவில் தோய்த்தும் செய்யப்படும் ஹோமத்தால் மனதுக்கினிய கன்னிகையை மனைவியாக அடையலாம்.செவ்வரளியாலோ, வெள்ளை அரளியாலோ இருபத்தியோரு இரவுகள் தொடர்ந்து ஹோமம் செய்தால், அவன் நிறை செல்வவளத்தையும் அடைந்து மகத்தான நிலைக்கு உயர்வான்.

சிவதூதி காயத்ரி:


ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.



மூல மந்த்ரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் சிவதூத்யை நம:

த்யான ஸ்லோகங்கள்:


 நிதாக காலே மத்யான்ஹே திவாகர ஸமப்ரபாம்
நவரத்ன க்ரீடம் சத த்ரீக்ஷணாமருணாம்பராம்
நாராபரண ஸம்பின்ன தேஹகாந்தி விராஜிதாம்
ஸூசிஸ்மிதாஷ்டபுஜாம் ஸ்தூயமானாம் மஹர்ஷிபி:


பாசம் கேடயம் ததாரத்ன சக்ஷகம் வாமபாஹுபி:
தக்ஷிணைரங்குஸம் கட்கம் குடாரம் கமலம் ததா
ததானம் ஸாதகாபீஷ்ட தானோத்யம ஸமன் விதாம்
த்யாத்வைனம் பூஜயேத் தேவீம் தூதீம் துரிதம்துர்நீதி நாஸினீம்.

நூர்வாநிபாம் த்ரிநேத்ராம் ச மஹாஸிம்ஹாஸனாம்
ஸங்காரிபாண சாபம் ச ஸ்ருணி பாஸௌ வராபயே
தததீம் சிந்தயேந்நித்யாம் ஸிவதூதீம் பரஸிவாம்.
ஸர்வாதாரம் ஸாமகான ப்ரவீணாம்


ஸூக்ஷ்மாம் சுத்தாம் ஸுர்யஸோமாக்னி நேத்ராம்
ஸ்ரீ சக்ரஸ்தாம் சின்மயீம் சுத்தவித்யாம்
ஆராத்யாம் வந்தே மாதரம் வேத வேத்யாம்.


பாலஸூர்ய ப்ரதீகாஸாம்  பந்தூக ப்ரஸவாருணாம்
விதி விஷ்ணுஸிவஸ்துத்யாம் தேவ கந்தர்வ ஸேவிதாம்
ரக்தாரவிந்த ஸங்காஸாம் ஸர்வாபரண பூஷிதாம்
ஸிவதூதீம் நமஸ்யாமி ரத்னஸிம்ஹாஸனஸ்திதாம்.


ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்:


ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ருகார ப்ரக்ருதிக த்ருதி கலாத்மிகாம்
ஸ்ரீசிவதூதி நித்யாஸ்வரூபாம் ஸர்வானந்தமய சக்ரஸ்வாமினீம்
ரஸாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபிணீம் ஸ்ரீ த்ரிவி
கமல வாஸினீம் ஸர்வமங்கள தேவதாம்
மேதாலக்ஷ்மீ ஸ்வரூப சிவதூதி நித்யாயை நம:


வழிபட வேண்டிய திதிகள்:


சுக்ல பக்ஷ ஸப்தமி/க்ருஷ்ண பக்ஷ நவமி (ஸப்தமி திதி ரூப சிவதூதி நித்யாயை நம:)

நைவேத்யம்: வெல்லம்.

திதிதான பலன்:

வெல்லத்தை நிவேதித்து தானம் செய்தால் மனதிலுள்ள சோகம் அகலும்.

பஞ்சோபசார பூஜை:

ஓம் சிவதூதி நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் சிவதூதி நித்யாயை தூபம் கல்பயாமி நம:   
ஓம் சிவதூதி நித்யாயை தீபம் கல்பயாமி நம:   
ஓம் சிவதூதி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:   
ஓம் சிவதூதி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள்:


சிறந்த அறிவாளிகள், நற்குணம் மிக்கவர்கள், பெருஞ் செல்வந்தர்கள், கருத்த நிற மேனி கொண்டவர்கள், கலைகளில் சிறந்தவர்கள், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், திறமை மிக்கவர்கள்.


யந்த்ரம் வரையும் முறை:


சந்தன குங்குமக் கலவையால் முக்கோணம், வட்டம், ஆறிதழ், அறுகோணம், எண்கோணம், எட்டிதழ், கிழக்கு மேற்கு வாயில்களுடன் கூடிய இரு சதுரங்கள் கொண்ட யந்திரத்தை வரையவும்.
விஹ்வாலா, கார்ஸனி, லோலா, நித்யா, மதனா, மாலினி, வினோதா, சௌதுகா, புண்யா, புராணா போன்ற சக்திகளை பூபுரத்திலும், எட்டு கோணங்களில் வாகீச, வரதா, விஸ்வா, விபவ, விக்னகாரிணீ, வீரவிக்னஹரா, வித்யா போன்ற சக்திகளையும், எட்டு தளங்களில் சுமுகி, ஸுந்தரீ, ஸாரா, ஸமாரா, ஸரஸ்வதி, ஸமயா, ஸர்வகா, ஸித்தா போன்ற சக்திகளையும் பூஜிக்க வேண்டும். ஆறு தளங்களில் டாகினி, காகினி முதலியோரையும், முக்கோண மூலைகளில் இச்சா, ஞான, க்ரியா சக்திகளையும் பூஜிக்கவும்.

இத்திதிகளில் செய்யத் தக்கவை:


மனை கட்டுதல், உபநயனம், திருமணம், தேவதைகளை பிரதிஷ்டை செய்தல், பயிரிடுதல், அணிகலன்கள் செய்தல் மற்றும் யுத்தத்திற்கு நாள் குறித்தல் போன்ற செயல்களைப் புரியலாம்.


அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ ஸப்தமி திதி துதி

ஸப்தமியாம் சபையுள்ளே கடலேழ் சூழ
சப்தரிஷி சப்த கன்னி தணிந்து போற்ற
அந்தரிடப் பாகமதாய் முக்கோணத்துள்
அமர்ந்திருக்கும் பேரின்ப ஆதித்தாயே


இத்தனை நாள் படுதுயரம் காணாதாள் போல்
இருந்துவிட்டால் யார் தீர்ப்பார் எனைக் கண் பாராய்
சுத்தமதி ரவி கலந்துள் ஒளியாய் நின்ற
சோதியே மனோன்மணியே சுழுமுனை வாழியவே


அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ ஸப்தமி திதி துதி:

நீதமுடன் உருவாகி அரூபமாகி நிஷ்களமாய்
நிராமயமாய் நின்ற சூலி
வேதமுடிவாகி நின்ற விமலித் தாயே
விண்ணொளியாய்ப் பரவெளியாய்க் கண்ட சக்தி


பாதமதில் சிலம்புகளில் கலீல் என்றோத
பக்தருக்காகப் பிரசன்னமாகும் ரூபி
சோதனையாய்ச் சோமகலையாக வந்த
சோதி மனோன்மணித் தாயே சுழிமுனை  வாழ்கவே.


மாத்ருகா அர்ச்சனை:

ஓம் சிவதூத்யை நம:
ஓம் ஸுநந்தாயை நம:
ஓம் ஆனந்தின்யை நம:
ஓம் விஷபத்மின்யை நம:
ஓம் பாதாள கண்டமத்யஸ்தாயை நம:

ஓம் ஹ்ருல்லேகாயை நம:
ஓம் வனகேசர்யை நம:
ஓம் கலாயை நம:
ஓம் ஸப்ததஸ்யை நம:
ஓம் ஸுத்தாயை நம:

ஓம் பூர்ண சந்த்ர நிபானனாயை நம:
ஓம் ஆத்ம ஜோதிஷே நம:
ஓம் ஸ்வயம் ஜோதிஷே நம:
ஓம் அக்னி ஜோதிஷே நம:
ஓம் அநாஹதாயை நம:

ஓம் ப்ராணசக்த்யை நம:
ஓம் க்ரியா சக்த்யை நம:
ஓம் இச்சா சக்த்யை நம:
ஓம் ஸுகாவஹாயை நம:
ஓம் ஞானசக்த்யை நம:

ஓம் ஸுகானந்தாயை நம:
ஓம் வேதின்யை நம:
ஓம் மஹிமாயை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் ருஜவே நம:

ஓம் யக்ஞாயை நம:
ஓம் யக்ஞஸாம்னாயை நம:
ஓம் ஸாமரஸ்ய விநோதின்யை நம:
ஓம் கீத்யை நம:
ஓம் ஸாமத்வன்யை நம:

ஓம் ஸ்ரோதாயை நம:
ஓம் ஹும்க்ருத்யை நம:
ஓம் ஸாமவேதின்யை நம:
ஓம் அத்வாராயை நம:
ஓம் கிரிஜாயை நம:

ஓம் க்ஷூத்ராயை நம:
ஓம் நிக்ரஹாயை நம:
ஓம் அனுக்ரஹாத்மிகாயை நம:
ஓம் புராண்யை நம:
ஓம் சில்பிஜனன்யை நம:

ஓம் இதிகாசாயை நம:
ஓம் அவபோதின்யை நம:
ஓம் வேதிகாயை நம:
ஓம் யக்ஞஜனன்யை நம:
ஓம் மஹாவேத்யை நம:

ஓம் ஸதக்ஷிணாயை நம:
ஓம் ஆன்வீக்ஷிக்யை நம:
ஓம் த்ரய்யை நம:
ஓம் வார்த்தாயை நம:
ஓம் கோரக்ஷகாயை நம:
ஓம் கதிதாயை நம:







No comments:

Post a Comment