Monday 20 June 2016

பரிபூரண வாழ்வருளும் பகமாலினி!



 பரிபூரணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஸ்ரீ, ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி போன்றவை, ‘பகம்’ எனும் சொல்லால் குறிக்கப்படுபவை. இவற்றுடன் இந்த அம்பிகை கூடியிருப்பதாலும் ‘பகமாலினி’ என்றானாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இந்த அம்பிகையின் அம்சங்களே யாதலால் இத்தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு.

இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் பதம் அடிக்கடி வருவதால் ‘‘பகமாலினி” என இந்த அம்பிகை வழிபடப்படுகிறாள்.

சிவந்த நிறமுள்ளவள் இவள். சிவப்புக் கற்களால் ஆன அணிகலன்களை அணிவதில் பிரியமுள்ளவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழும் இவள் முக்கண்களை உடையவள்.

இடது கரங்களில் அல்லிமலர், பாசக்கயிறு, கரும்புவில் போன்றவற்றை ஏந்தியும், வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் அழகு திருக்கோலம் காட்டுபவள். அந்த அழகுக்கு அழகு செய்யும் வண்ணம் அணிகலன்களோடு அருளும் இந்த அன்னையின் அருளுக்கு ஈடு இணை ஏது? இந்த அம்பிகையைச் சுற்றிலும் பல்வேறு சக்திக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளதாக மகான்கள் கூறுகின்றனர்.

செருக்குடன் தோற்றமளிக்கும் இந்த அம்பிகை தைரியத்திற்கு அதிதேவதையாவாள்.தன்னை உபாசனை செய்யும் பக்தர்களுக்கு வாழ்வில் வெற்றியைக் குவிப்பவள். கர்ப்பத்திலுள்ள சிசுவைக் காத்து சுகப்பிரசவம் ஏற்பட திருவருள்புரிபவள்.

பகமாலினி காயத்ரி:

ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

மூல மந்த்ரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆம் ஐம் பக பகே பகினி பகோதரி பகமாலே பகாவஹே பககுஹ்யே பகயோனி பகநிபாதினி ஸர்வபக வஸங்கரி பகரூபே நித்யக்லின்னே பகஸ்வரூபே ஸர்வாணி பகானிமே ஹ்யானய வரதே ரேதே ஸுரேதே

பகக்லின்னே க்லின்னத்ரவே க்லேதய த்ராவய அமோகே பகவிச்சே க்ஷுப க்ஷோபய ஸர்வஸத்வான் பகேஸ்வரீ ஐம் ப்லூம் ஐம் ப்லூம் மேம் ப்லூம் மோம் ப்லூம் ஹேம் ப்லூம் ஹேம் க்லின்னே ஸர்வாணி பகானிமே வஸமானய ஸ்த்ரீம் ஹரப்லேம் ஹ்ரீம் ஆம் பகமாலினி நித்யகலா தேவி ஸ்ரீ பாதுகாம் பூஜயாமி நம:


த்யான ஸ்லோகங்கள் :

பகரூபாம் பகமயாம் துகூலவஸனாம் சிவாம்
சர்வாலங்கார ஸம்யுக்தாம் ஸர்வலோக வசங்கரீம்
பகோதரீம் மஹாதேவீம் ரக்தோபல ஸமப்ரபாம்
காமேஸ்வராங்க நிலயாம் வந்தே ஸ்ரீ பகமாலினிம்.

ருணாம் அருணா கல்பாம் ஸுந்தரீம் ஸுஸ்மி தாநநாம்
த்ரிநேத்ராம் பாஹுபி: ஷட்பி: உபேதாம் கமலா ஸநாம்
கல்ஹார பாச புண்ட்ரேக்ஷு கோதண்டாம் வாம பாஹுபி:
ததாநம் தக்ஷிணை: பத்மம் அங்குசம் புஷ்பஸாயகம்

தாதவிதா பிப்பரித: ஆவ்ருதாம் சக்தி பிராத்மபி:
அக்ஷரோத்தபிரந்யாபி: ஸ்மரோந்மாத மாதாத்மபி:
பகரூபாம் பகமயாம் துகூலவசனாம் சிவாம்
ஸர்வாலங்கார ஸம்யுக்தாம் ஸர்வலோக வசங்கரீம்

பகோதரீம் மஹாதேவீம் ரக்தோபல ஸமப்ரபாம்
காமேஸ்வராங்க நிலயாம் வந்தே ஸ்ரீபகமாலினீம்.
கதம்பவன மத்யஸ்தாம் உத்யத் ஸூர்ய ஸமத்யுதிம்
நானாபூஷண ஸம்பன்னாம் த்ரைலோக்யாகர்ஷண க்ஷமாம்

பாஸாங்குஸௌ புஸ்தகம் ச தௌபிகாகத  லேகினீம்
வரம் சாபயம் சைவ தததீம் விஸ்வமாதரம்
ஏவம் த்யாயேத் மஹாதேவீம் பகமாலாம் விசக்ஷண:
குந்த குட்மல ஸுச்ரோணீ தந்த பங்க்தி விராஜிதம்
கந்தர்ப்ப கோடி லாவண்யாம் வந்தேஹம் பகமாலினீம்.


ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம் :

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்திதாம் ஆகார ப்ருக்திக மானதா கலாத்மிகாம் பகமாலினி நித்யா ஸ்வரூபாம் ஸர்வாசாபரிபூரக சக்ரஸ்வாமினீம் புத்யாகர்ஷிணி சக்தி ஸ்வரூபாம் ஸ்ரீ நாராயண வக்ஷஸ்தல கமலவாஸினீம் ஸர்வமங்கள தேவதாம் ஸௌபாக்யலக்ஷ்மி ரூபேண பகமாலினி நித்யாயை நம:

வழிபட வேண்டிய திதிகள்:

சுக்ல பக்ஷ த்வதியை/க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தசி (த்வதியை திதி ரூபிண்யை பகமாலின்யை நம:)

நைவேத்தியம்:

நாட்டுச் சர்க்கரை.

பூஜைக்கான புஷ்பங்கள்:

மரிக்கொழுந்து, தவனம் போன்ற பச்சை நிற இலைகள், மலர்கள் போன்றவற்றால் இத்தேவியை பூஜிக்க வேண்டும்.

திதி தான பலன்:

நாட்டுச்சர்க்கரையை நிவேதித்து தானம் செய்ய ஆயுள் விருத்தியாகும்.

பஞ்சோபசார பூஜை:

ஓம் பகமாலினி நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் பகமாலினி நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் பகமாலினி நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் பகமாலினி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் பகமாலினி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்:

இந்த தேவியின் திதியில் பிறந்தவர்கள் சிவந்த நிறத்தினர்கள். அழகானவர்கள். சிரித்த முகத்தினர். எப்போதும் செல்வம் நிறைந்தவர்களாக வாழ்வர். நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை உடையவர்கள். மிகவும் செருக்குடையவர்கள்.

தன்னையொத்த செல்வந்தர்களின் கூட்டத்தால் சூழப்பட்டிருப்பவர்கள். இத்திதியில் பிறந்தோர் ‘பகமாலினி’ தேவியை வழிபட வாழ்வில் வளங்கள் பெருகும். அவர்கள் இத்தேவியின் மூல மந்திரத்தை தினமும் 45 முறை பாராயணம் செய்தால் அனைத்து சங்கடங்களும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும்.

யந்திரம் வரையும் முறை:

குங்கும சந்தனக் கலவையால் மேற்கில் வாயிலுடன் இரு சதுரஸ்ரம், நடுவே ஐந்திதழக் கமலம், இரு வட்டங்கள் நடுவில் படத்தில் காட்டியபடி பிரித்த சம கோடுகளால் ஆன முக்கோணம் வரைந்து வழிபட வேண்டும்.

இந்த யந்திரத்தில் மதனா, மோகினி, லோலா, ஜம்பினி, உத்யமா, சுபா, ஹ்லாதினி, த்ராவிணி, ப்ரீதி, ரதி, ரக்தா, மனோரமா, சர்வோன்மாதா, சர்வசுகா, அனங்கா, அமிரோத்யாமா, அனல்யா, வியாக்தவிபவா, விவிதா, விக்ரகா, ஷோபா போன்ற சக்திகள் உறைகின்றனர்.

இத்திதிகளில் செய்யத் தக்கவை:

முஞ்சிப்புல்லாலே செய்யக் கூடிய வேலைகள், திருமணம், யாத்திரை, தேவதைகளைப் பிரதிஷ்டை செய்தல், வீடு கட்ட ஆரம்பித்தல் போன்றன.

அகத்தியர் அருளிய சுக்லபக்ஷ த்விதியை நித்யா திதி துதி:

 துதிகை என்றும் உபயம் என்றும் இடைகள் என்றும்
சுவர்க்கமென்றும் நரகம் என்றும் சொல்லக்கேட்டு
திரவியாய உடல் உயிராய் ஆணாய் பெண்ணாய்
வாழ்வாகித் தாழ்வாகி வழங்கும் தாயே!

விதி தொலைந்து வினை தொலைந்து வெட்கம் கெட்டு
வீம்பு பயம் ஆசை துக்கம் விட்டே ஓட சுதன் மு
கம்பார் மதி முகத்தாய் சூட்சா சூட்சிச் சோதியே!
மனோன்மணியே! சுழுமுனை வாழ்வே!

அகத்தியர் அருளிய க்ருஷ்ணபக்ஷ த்விதியை நித்யா திதி துதி :

பிரியமுடன் பதினாலு கலையுமாகி
பேசரிய தீபவொளி பிரம்மமாகி
உரியதொரு தந்திவெளி தீபங்காட்டி
ஓங்கார ரீங்கார சக்தியாகி

சரியென்று மதித்திடவே என்முன் வந்த
சங்கரியே சாம்பவியே சர்வரூபி
துரிய துரியாதீத மமர்ந்து நின்ற
சோதி மனோன்மணித்தாயே சுழிமுனை வாழ்வே.

மாத்ருகா அர்ச்சனை.

ஓம் பகமால்யை நம:
ஓம் பகாயை நம:
ஓம் பாக்யாயை நம:
ஓம் பகின்யை நம:
ஓம் பகோதர்யை நம:

ஓம் குஹ்யாயை நம:
ஓம் தாக்ஷாயண்யை நம:
ஓம் கன்யாயை நம:
ஓம் தக்ஷயக்ஞவிநாஸின்யை நம:
ஓம் ஜயாயை நம:

ஓம் விஜயாயை நம:
ஓம் அஜிதாயை நம:
ஒம் அபராஜிதாயை நம:
ஓம் ஸுதிப்தாயை நம:
ஓம் லேலிஹானாயை நம:

ஓம் கராளாயை நம:
ஓம் ஆகாஸநிலயாயை நம:
ஓம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம:

ஓம் ப்ரஹ்மாஸ்யை நம:
ஓம் ஆஸ்யரதாயை நம:
ஓம் ப்ரஹ்வ்யை நம:
ஓம் ஸாவித்ர்யை நம:
ஓம் ப்ரஹ்மபூஜிதாயை நம:

ஓம் ப்ரஜ்ஞாயை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் பராயை நம:
ஓம் புத்தயே நம:
ஓம் விஸ்வமாத்ரே நம:

ஓம் ஸாஸ்வத்யை நம:
ஓம் மைத்ர்யை நம:
ஓம் காத்யாயன்யை நம:
ஓம் துர்க்காயை நம:
ஓம் துர்க்கஸந்தாரிண்யை நம:

ஓம் பராயை நம:
ஓம் மூலப்ருக்ருதயே நம:
ஓம் ஈசானாயை நம:
ஓம் ப்ராதானேஸ்வர்யை நம:
ஓம் ஈஸ்வர்யை நம:
ஓம் ஆப்யாயன்யை நம:

ஓம் பாவன்யை நம:
ஓம் பவித்ராயை நம:
ஓம் மங்கலாயை நம:
ஓம் யமாயை நம:
ஓம் ஜ்யோதிஷ்மத்யை நம:

ஓம் ஸம்ஹாரிண்யை நம:
ஓம் ஸ்ருஷ்ட்யை நம:
ஓம் ஸ்ருஷ்டிஸ்
திதியந்தகாரிண்யை நம:
ஓம் அகோராயை நம:
ஓம் கோரரூபாயை நம:






No comments:

Post a Comment