Monday 20 June 2016

வெற்றிகளைக் குவிக்கும் விஜயா நித்யா!

இந்த அம்பிகை உதய சூரியனைப் போல ஜொலிக்கும் மேனியை உடையவள். ஐந்து முகங்கள். பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும், நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்கள் இந்த அன்னையின் அழகுக்கு மேலும் அழகு செய்கின்றன.



தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லிமலர்
ஆகியவற்றை ஏந்தி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்ட நிலையில் பஞ்ச மகாபாதகங்களை அழிக்கும் தன் பாதத்தை தாமரை மலரில் இருந்திய தோற்றத்துடன் பொலிகிறாள்.

சுகாசனத்தில் வீற்றிருக்கும் இந்த அம்பிகையைப் போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்து கணக்கற்ற சக்திகள் இந்த அன்னையைச் சூழ்ந்து இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அழிக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் அருள்கிறாள். வழிபடுவோரின் துன்பங்களை வேரோடு களைபவள். நம்பினோர்க்கு அபயம் அளிப்பவள்.

தேவியின் புன்னகை ததும்பும் திருமுக மண்டலம் மனதைக் குளிர்விக்கிறது எனில் கண்களோ, ‘அஞ்சாதே, நான் இருக்கிறேன்’ எனத் துணிவூட்டுகிறது. கலைகளின் பல்வேறு வடிவாய் அருள்பவள். வெற்றியே வடிவாகத் திகழ்பவள்.


அம்பாளை உபாஸித்தால் கிடைக்காததில்லை. சாஸ்திரங்கள் இதிலே பல பலன்களைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. அம்பாளை உபாஸிப்பதால் மிகவும் உத்தமமான வாக்கு சித்திக்கிறது. கவித்வத்தை விசேஷமாக அநுக்ரஹிக்கிறாள். காளிதாஸர் பூர்வத்தில் மிகவும் மந்தமாக இருந்தார் என்றும், உஜ்ஜயினியில் காளி அநுக்கிரஹம் கிடைத்தே அவர் கவி சிரேஷ்டரானார்.

கவித்வம், சங்கீதம் முதலிய கலைகள் எல்லாம் அம்பிகையின் அநுக்கிரஹத்தால் உண்டாகின்றன. பொதுவாக இதற்கெல்லாம் ஸரஸ்வதியை அதிதேவதையாகச் சொல்கிறோம். இப்படிப்பட்ட ஸரஸ்வதி, அம்பாளின் சந்நிதானத்தில் எப்போதும் வீணையோடு கானம் ண்ணிக்கொண்டிருக்கிறாளாம். என்ன பாட்டுக்கள் பாடுகிறாள்? அம்பாளின் பெருமையைப் பற்றியா? இல்லை. மகாபதிவிரதையான அம்பாளுக்கு ஈஸ்வரனைப் பாடினாலே சந்தோஷம். அதன்படி வாணி ஈஸ்வரப் பிரபாவத்தைப் பாடிக்கொண்டிருக்கிறாள்.

அம்பாள் அதை ரொம்பவும் ரஸித்து ஆனந்தப்படுகிறாள். அம்பாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டுத் தலையை ஆட்டிக்கொண்டு ‘பேஷ் பேஷ்’ என்று வாய் விட்டுச் சொல்லி விடுகிறாள். அவ்வளவுதான். அம்பாளுடைய அந்த வாக்கின் மாதூர்யத்தில் ஸரஸ்வதியின் வீணா நாதம் அத்தனையும் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறதாம். இப்படிப்பட்ட மதுரவாக்குக் கொண்டவளுக்கு முன்பா என் வித்தையைக் காட்டினேன் என்று வெட்கப்பட்டு, ஸரஸ்வதி தன் வீணையை உறையில் வைத்து மூடி விடுகிறாளாம்.

வழிபடு பலன்:

அறிவு, பெயர், புகழ், கௌரவம், வெற்றி, அந்தஸ்து போன்றவற்றை அருள்பவள். குடும்ப ஒற்றுமை சிறக்கும். போட்டி, பந்தயங்களிலும் வழக்குகளிலும் வெற்றி கிட்டும்.

விஜயா காயத்ரி:

ஓம் விஜயா தேவ்யை ச வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி: ப்ரசோதயாத்.


மூலமந்த்ரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஓம் ஐம் ப்ம்ர்ய் ஊம் ஐம் விஜயா நித்யாயை நம:

த்யான ஸ்லோகங்கள்:

ஜயப்ரதாம் ஸ்ரீவிஜயாத்ம போத ஸௌக்ய ப்ரதாம்
மோக்ஷ விதாலாதக்ஷாம் ஜயாதி ரூபாம்
விஜயாம ஜேயாம்
ஐகார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்.

பஞ்ச வக்த்ராம் தஸபுஜாம் ப்ரதிவக்த்ரம் த்ரிலோசனாம்
பாஸ்வன் முகுட வின்யஸ்ய சந்த்ரரேகா விராஜிதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் பீதாம்ப்ர விராஜிதாம் உத்யத்
பாஸ்வத் விந்து துல்ய தேஹ காந்தி ஸுசிஸ்மிதாம்

ஸங்கம் பாஸம் கேட சாபௌ கல்ஹாரம் வாமபாஸுபி:
சக்ரம் ததா ஸங்க கட்கம் ஸாயகம் மாதுலிங்கதம்
ததானாம் தக்ஷிணை ஹஸ்த: ப்ரயோகே: பீமதர்ஸனாம்
வ்யாக்ராரூடாபித; ஸக்திபி: பரிவாரிதாம் ஸமரே

பூஜனேன்யேஷு ப்ரயோகேஷு ஸுகாஸனாம்
ஸக்தயஸ்ஸாபி பூஜாயாம் ஸுகாஸன  ஸமன்விதா:
ஸர்வ தேவ்ய: ஸமாகாரா: முக பாண்யாபிதான்யபி.
ஏக வக்த்ராம் தஸபுஜாம் ஸர்ப்ப யக்ஞோபவீதினீம்


தம்ஷ்ராகரால வதனாம் நரமாலா விபூஷிதாம்
அஸ்தி ஸர்மாவ ஸேஷாட்யாம் வஹ்னிகூட ஸமப்ரபாம்
வ்யாக்ராம்பராம் மஹாப்ரௌட ஸவாஸன விராஜிதாம்
ரணே ஸ்மரண மாத்ரேண ப்ரக்தேப்யோ விஜயப்ரதம்


ஸூலம் ஸர்பம் சதக்காஸி ஸ்ருணி  கண்டா ஸனித்வயம்
பாஸாமக்னி மபிநீம் சததானாம் விஜயாம்  ஸ்மரேத்.
கஜாஸ்ய ஸ்கந்த ஜனனீம் ஸுஜனார்த்தி விநாஸினீம்
யஜாமஹே ப்ரதிதினம் விஜயாம் விஸ்வ மோஹினீம்.


ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்:

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ஐகார ப்ரக்ருதிக, ஸ்ரீகலா கலாத்மிகாம், ஸ்ரீவிஜயா நித்யா ஸ்வரூபாம் ஸர்வ ஸித்திப்ரத சக்ர ஸ்வாமினீம் நாமாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபாம், ஸ்ரீதாமோதர வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வ மங்கள தேவதாம் ஸ்ரீசக்தி லக்ஷ்மி ரூபேண விஜயா நித்யாயை நம:

வழிபட வேண்டிய திதிகள்:

ஸுக்ல பக்ஷ த்வாதசி / க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தி

நைவேத்யம்

அவலால் செய்யப்பட்ட பலகாரம் (அ) அவல்.

பூஜைக்கான புஷ்பங்கள்

மஞ்சள் நிறமுள்ள மலர்கள்.


திதி தான பலன்:

அவலால் செய்யப்பட்ட பலகாரங்களை இந்த அன்னைக்கு நிவேதித்து தானமளித்தால் தேவி மகிழ்வாள்.


பஞ்சோபசார பூஜை:

ஓம் விஜயா நித்யாயை கந்தம் கல்பயாமி நமஹ
ஓம் விஜயா நித்யாயை தூபம் கல்பயாமி நமஹ
ஓம் விஜயா நித்யாயை தீபம் கல்பயாமி நமஹ
ஓம் விஜயா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நமஹ
ஓம் விஜயா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம்தர்ச்யாமி நமஹ



இத்திதியில் பிறந்தவர்களின் குண நலன்கள் :

காமம் மிகுந்தவர்கள். சுற்றத்தாருடன் கூடிய பராக்ரம சாலிகள். செல்வம் மிகுந்தவர்கள். சாந்தகுணம் கொண்டவர்கள். தைரிய சாலிகள். தியாக மனப்பான்மை மிக்கவர்கள். சகல கலைகளும் முயன்றால் இவர்களுக்குக் கிட்டும். எதிலும் வெற்றி பெறும் வரை விடாமுயற்சி செய்வர். சாதனையாளர்கள்.

தங்களைச் சார்ந்துள்ளவர்களைக் காப்பதிலும், அவர்கள் வெற்றிபெறுவதற்கு எல்லாப் பணிகளையும் செய்வதிலும் முனைப்பு உள்ளவர்கள். எதிலும் வெற்றியையே விரும்புவதோடு அதைச் சாதிக்கும் வல்லமையும் படைத்தவர்கள். தேவியின் காயத்ரியை இத்திதியில் பிறந்தவர்கள் தினமும் 45 தடவை பாராயணம் செய்தால் நலங்கள் பெருகி இன்னல்கள் அகலும்.


யந்திரம் வரையும் முறை:

சந்தன குங்குமக் கலவையால் வட்டம், எட்டிதழ்கள், வட்டம், பதினாறு இதழ்கள், எண்கோணம், இரு வட்டங்கள், நான்கு வாயில்களுடன் கூடிய இரு சதுரங்கள் கொண்ட யந்திரத்தை வரைந்து பூஜிக்கவும். புலிக்கூட்டங்களின் மேல் அமர்ந்த தேவியின் சக்திகளாகிய யோகினிகளை த்யானிக்கவும்.

இத்திதிகளில் செய்யத் தக்கவை:

செல்வத்தைப் பெருக்கும் முதலீடுகள், தானியங்களைச் சேர்த்தல், சத்கர்மங்களையும், தர்ம காரியங்களையும் செய்தல் முதலியன.சிரவணம் என்னும் திருவோண நட்சத்திரத்துடன் கூடிய துவாதசி ‘‘ச்ரவணத் துவாதசி” எனப்படும். அந்நாள் உபவாசத்திற்கு மட்டுமே ஏற்றது.


அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ துவாதசி விஜயா நித்யா துதி:

துவாதசி யானவிரு மாவும் ஒத்துச் சுணைகடந்து
 அணைகடந்து துவாதசாந்தம்
துவாதசி யொடுங்கிநின்ற மூலஞனம் சுருதி
முடி விடமெனக்குச் சொல்லு மம்மா


துவாதசியால் கேசரத்து ளாடி நின்ற
சுந்தரநற் சௌந்தரியே சொரூபத் தாயே
துவாதசியான பன்னிரண்டு மொன்றாஞ்
சோதியே மனோன்மணியே சுழிமுனை வாழ்வே.



அகத்தியர் அருளிய கிருஷ்ண பக்ஷ துவாதசி விஜயா நித்யா துதி:

மதியான நாலகலையான ரூபி மாதாவே
வரபிரசாதங்கள் தந்து
கதிபெறவே செய்த பூரணியே அம்மா
கிருபையுடன் தவநிலையே காட்டி வைத்தாய்


பதிவான கலை நாலும் பாழ் போகாமல்
பாக்கியங்கள் தந்தருளும் பரையே சித்தர்
துதிதனையே பெரிதென்று நினைக்கும் தேவி
சோதிமனோன் மணித் தாயே சுழிமுனை வாழ்வே.



மாத்ருகா அர்ச்சனை:

ஓம் விஜயாயை நம:
ஓம் ஜயதாயை நம:
ஓம் ஜேத்ர்யை நம:
ஓம் அஜிதாயை நம:
ஓம் வாமலோசனாயை நம:

ஓம் ப்ரதிஷ்டாயை நம:
ஓம் அந்தஸ்திதாயை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் ஜினாயை நம:
ஓம் மாயாயை நம:

ஓம் குலோத்பவாயை நம:
ஓம் க்ருஸாங்க்யை நம:
ஓம் வாயவ்யை நம:
ஓம் க்ஷமாயை நம்:
ஓம் க்ஷமா கண்டாயை நம:

ஓம் த்ரிலோசனாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் காமேஸ்வர்யை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் காம்யாயை நம:

ஓம் காமப்ரியாயை நம:
ஓம் காமரயை நம:
ஓம் காமாசார விஹாரிண்யை நம:
ஓம் துச்சங்காயை நம:
ஓம் நிராலஸ்யாயை நம:

ஓம் நிரூஜாயை நம:
ஓம் ருஜநாஸின்யை நம:
ஓம் விஸல்யகரிண்யை நம:
ஓம் ஸ்ரேஷ்டாயை நம:
ஓம் ம்ருத ஸஞ்ஜீவன்யை நம:

ஓம் படாயை நம:
ஓம் ஸந்தின்யை நம:
ஓம் சக்ர நமிதாயை நம:
ஓம் சந்த்ர சேகராயை நம:
ஓம் ஸ்வர்ணாகாயை நம:

ஓம் ரத்ன மாலாயை நம:
ஓம் அக்னி லோகாப்தாயை நம:
ஓம் ஸஸாங்காயை நம:
ஓம் அவயவாம்பிகாயை நம:
ஓம் தாராத்தாயை நம:

ஓம் தாரயந்த்யை நம:
ஓம் மர்யை நம:
ஓம் பூரிப்ரபாயை நம:
ஓம் ஸ்வராயை நம:
ஓம் க்ஷேத்ரஜ்ஜாயை நம:

ஓம் பூரிஸித்தாயை நம:
ஓம் மந்திர ஸுங்காரரூபிண்யை நம:
ஓம் ஜ்யோதிஷே நம:
ஓம் க்ஞானாயை நம:
ஓம் க்ரஹகத்யை நம:
ஓம் ஸர்வப்ராண ப்ருதாம்வாராயை நம:








No comments:

Post a Comment