Tuesday 14 June 2016

ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி!

ஹொரநாடு கர்நாடக மாநிலத்தின் சிக்க்மகலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்.இது மேற்கு மலை தொடர்ச்சியில் உள்ளது.சிச்கமகலூரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் அடர்ந்த காடு மற்றும் பள்ளத்தாக்கு சூழ உள்ள பகுதியில் உள்ளது.

Annapoorneshwari Temple Horanadu Karnataka
முடிகேரி ,கலாச வழியாக ஹொரநாடு சென்று அடைய வேண்டும்.தேயில தோட்டங்கள் ,காப்பி தோட்டங்கள் செல்லும் பாதை முழுவதும் உள்ளது..இது ஒரு புராதன ஆலயம்.இங்குள்ள அன்னபூர்ணேஸ்வரி அகத்தியரால் நிறுவப்பட்டது என்று சொல்லப்படுகிறது.


ஆனால் தற்பொழுது இருக்கும் அம்மன் சிலை1973 இல் கோவில் புனருத்தாரணம் செய்த பொழுது பிரதிஷ்டை செய்யப்பட்டது.இப்பொழுது அம்மன் ஆதி சக்த்யமகா அன்னபூர்ணேஸ்வரி என்ற திருநாமத்தில் அறியபடுகிறாள்.


நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் உள்ள அன்னபூர்ணதேவியை  கையில் சங்கு சக்கிரத்துடன் காணலாம்.


முழுவதும் தங்கத்தால் ஆன விக்கிரகம்.


அமைதி, அழகு, தூய்மை, தெய்விகம் ததும்புகிற சூழல். அர்ச்சனை சீட்டு வாங்கினால், இங்கே தருகிற முக்கியமான பிரசாதம் ‘அரிசி’தான்! அந்த அரிசியைக் கொண்டுவந்து, நமது வீட்டின் அரிசி வைக்கும் டப்பாவில் போட்டு வைத்தால், என்றும் உணவுத் தட்டுப்பாடு வராது என்பது பலரின் அனுபவம். சிலர் வரும்போதே தேங்காய், வெல்லம், அரிசி போன்றவற்றைக் கொண்டுவந்து பூஜிக்கிறார்கள்.

உச்சிகால பூஜை முடிந்ததும், அனைவருக்கும் சாப்பாடு. பசியோடு யாரும் திரும்ப முடியாது. தட்டுகள், பாத்திரங்களை வெந்நீரில் தூய்மைப்படுத்துகிறார்கள். உணவும் ‘கை படாத’ தயாரிப்பு! சின்னக் குழந்தைகளுக்கு பசும் பால்! தங்குவதற்கு, கோயிலைச் சுற்றி இலவச தங்குமிடங்கள். இருக்கவே இருக்கின்றன கோயில் திண்ணைகள். விரிப்புகள், தலையணை, கம்பளம் எல்லாம் தருகிறார்கள்.


பகலில் ஒரு மணிக்கு ஆரம்பிக்கும் மதிய உணவு, மூன்று மணிவரை நடக்கிறது. இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்தால் ஒன்பது மணி வரை நீள்கிறது. சாம்பார், ரசம், பாயசம், மோர் என்று விருந்துச் சாப்பாடுதான்.

“காலை, மாலை காபி; நடுவுல பானகம் எல்லாம் உண்டு இங்கே.”


காசியில் உள்ள அன்னபூர்ணேஸ்வரி அமர்ந்த கோலத்தில் உள்ளது. அதுவும் தங்கத்தால் ஆன விக்கிரகம் தான்.


காசியில் உள்ள அன்னபூர்ணேஸ்வரி கையில் அன்ன கரண்டியுடன் காண படுவாள்.தினமும் அன்னபூர்ணேஸ்வரியை வணங்கினால் ஒருவனுக்கு வாழ்கையில் அன்னத்திற்கு திண்டாட்டம் வராது என்பது நம்பிக்கை.


செல்லும் வழி:

பெங்களூரில் இருந்து 330 கி.மீ;
சிக்மகளுரில் இருந்து 100 கி.மீ. பேருந்து வசதிகள் உண்டு.
அருகிலுள்ள விமான நிலையம்: மங்களூர்; அருகிலுள்ள ரயில் நிலையம்: ஷிமோகா.

தொடர்புக்கு: 08263-274614/ 269714.




No comments:

Post a Comment